முள் முருங்கை
இந்த முள்முருங்கையை கல்யாண முருங்கை எனும் சொல்றாங்க. அதாவது கல்யாணத்துக்கு முன்னாடி முகூர்த்த கால் நடுவாங்க, அது கூட இந்த முள்முருங்கை செடியையும் வீட்டு முன்னாடி நட்டு வைப்பாங்க. ஏன்னா இந்த முள்முருங்கை பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தும், கர்ப்பம் தரிக்கிறதுக்கும் ரொம்பவே உதவியா இருக்குதுங்க. நம்ப தாத்தா பாட்டி காலத்துல ஒரு பெண் குழந்தை வயசுக்கு வந்துட்டாலே அவங்க வீட்டுல ஒரு முள் முருங்கை செடிய நட்டு வெச்சுடுவாங்கலாமா.
முள்முருக்கு
ஏன்னா ஒரு மாசத்துல ஆறு தடவைக்கு இந்த முள் முருங்கை செடிய சுடு தண்ணியில போட்டு கொதிக்க வச்சோ இல்லைன்னா நரம்புகளை எடுத்துட்டு இலையை மட்டும் அரைச்சு தோசை மாவுல ஊத்தி தோசையாவோ இட்லியாவோ பணியாரமாகவோ இல்ல தோசைக்கு ஒரு துவையல் ஆகவும் செஞ்சு சாப்டா உடம்புக்கு அவ்வளவு நல்லாதாங்க. ஏனா சரி நிலை இல்லாத மாதவிடாய் நேரத்திலேயும் அதிக ரத்தப்போக்கு ரத்த கசிவு, இந்த மாதிரி ஒழுங்கு நிலை இல்லாத பிரச்சனைகளை இந்த ஒரே ஒரு கீரை சரிநிலை படுத்திருக்குங்க.

பெண்களின் பிரச்னையை தீர்க்கும்
இந்த முள்முருங்கை நம்ம சாப்பிடுறதுனால பெண்களுக்கான பிசிஓடி பிரச்சனை வரவே வராதுன்னு சொல்றாங்க. வெள்ளைப்படுதல் பிரச்சனையோ இது சரி பண்ணி கொடுக்குதுங்க. கருமுட்டை வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் இது ரொம்பவே உதவியா இருக்குதுங்க. பப்பாளி அன்னாசி கருச்சிக்கோட்டை இந்த மூன்று விடவும் இது சிறப்பான பலன் அளிக்கும். இந்த முருங்கை மர இலைகள் ஒரு காம்புல மூன்று இலைகள் இருக்குங்க. நம்ம சமையலுக்கு பயன்படுத்தும் போது அதோட நடு நரம்பையும், பக்க நரம்பையும் நீக்கிட்டு பயன்படுத்தலாம்.
இதுல அதிகமான நார் சத்து இருக்கிறனால, அந்த நரம்புகளை நீக்குறதுல நமக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லைங்க. இவ்ளோ சிறப்பான பயன்களை கொடுக்கிற இந்த மரத்தை வளர்ப்பது ரொம்பவும் எளிமையான விஷயம்ங்க. ஏன்னா இந்த மரத்துல இருந்து ஒரு கிளையை உடைத்து நம்ம நட்டு வச்சாலே நமக்கு எளிமையா இந்த மரம் வளர்ந்து வந்துருங்க. உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.